

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் ஏற்கெனவே முடிவடைந்தது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 9 கடைசி நாளாக இருந்தது. ஏப்ரல் 10-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 13, பிற்பகல் 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் 1,478 வேட்பாளர்கள், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளர்கள் என மொத்தம் 2,926 பேர் போட்டியிடுகின்றனர்.