

70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 7ம்தேதி அன்று தேர்தல் நடக்கிறது. அதனால், டெல்லி சட்ட சபைத் தேர்தலில் இன்று பல முக்கியத் தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த கிரண்பேடி முதலமைச்சர் வேட்பாளராக கிருஷ்ணா நகர் தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய் , மத்திய அமைச்சரும் கிருஷ்ணா நகர் தொகுதியில் 20 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தவருமான ஹர்ஷ்வர்தனும் உடன் இருந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஜய் மக்கான் சதார் பஜார் தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.