Last Updated : 01 Jan, 2015 05:12 PM

 

Published : 01 Jan 2015 05:12 PM
Last Updated : 01 Jan 2015 05:12 PM

அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பரம் பகிர்வு

நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன.

1988-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்பாக இந்த பகிர்வு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நடைபெறும்.

அதாவது, போர் ஏற்பட்டால் கூட அணுசக்தி நிலையங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடாது என்ற அடிப்படையிலும், விபத்து தவிர்ப்பு அடிப்படையிலும் அணுசக்தி நிலையங்களின் பட்டியல்கள் புத்தாண்டில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்திய அதிகாரிகள் இந்தப் பட்டியலை ஒப்படைக்க, இஸ்லாமாபாதில் இந்திய தூதரக அதிகாரியிடம் பாக். அதிகாரிகள் அவர்கள் நாட்டு பட்டியலை ஒப்படைத்தனர்.

மேலும், இந்தியச் சிறைகளில் உள்ள பாகிஸ்தானிய கைதிகள் விவரங்களையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகள் விவரங்களையும் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டனர்.

இதற்கான உடன்படிக்கையின் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதி ஆகிய நாட்களில் இருநாடுகளும் கைதிகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே எல்லையில் பிரச்சினைகள் இருந்தாலும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நேரத்திலும் இந்தப் பட்டியல் பகிர்வு இருநாடுகளிடையேயும் பிணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x