

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டது.
நேற்றிரவு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 3 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு கையெறி குண்டுகள், தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். இரவு 8 மணியளவில் தாக்குதல் தொடங்கியது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இரவு 11.35 மணியளவில் இரு தரப்புக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது.
இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 6-ம் தேதி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல் காரணமாக 10,000 பேர் இந்திய எல்லை கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். ஒரு ராணுவ வீரர் உட்பட 5 பேர் பலியாகினர்.