Published : 22 Jan 2015 10:19 AM
Last Updated : 22 Jan 2015 10:19 AM

பழங்குடியினர் வளர்ச்சிக்கு திட்டங்கள்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்குமாறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் கொள்கை குழுவை (நிதி ஆயோக்) பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பழங்குடியினர் நல்வாழ்வு தொடர்பான உயர்நிலை ஆலோ சனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாட்டின் முன்னேற்றத்துக்கு பழங்குடியின மக்கள் மிகப் பெரும் உந்துசக்தியாக உள்ளனர். பழங்குடியினர் பகுதியில் இடது சாரி தீவிரவாதம் பரவுவதை தடுக்க இப்பகுதிகளின் வளர்ச் சிக்கான யுக்திகளை வகுக்க வேண்டும். இதில் பழங்குடியினர் நல அமைச்சகம் முக்கியப் பங்காற்றிட வேண்டும். மேலும் இலக்கை அடைந்திட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறை கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பழங்குடியினர் பகுதியில் வளர்ச்சி மையங்களை அடை யாளம் கண்டு, அங்கு கல்வி வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகள் இருப்பதை பழங்குடியினர் நலத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

பழங்குடியினர் பகுதியில் தொழில்நுட்ப வசதிகள் குறிப்பாக மின்சாரம், மொபைல் போன் சென்றடைய வேண்டும்.

வளர்ச்சியுறாத பழங்குடியினர் பகுதிகளை சிறந்த கட்டமைப்பு வசதிகள் மூலம் வளர்ந்த பகுதி களுடன் இணைக்க வேண்டும்.

பழங்குடியினர் பகுதி வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் தொடர்புடைய ஆய்வு நிறுவனங் கள் மற்றும் தலைசிறந்த நிபுணர் களை கொள்கைக் குழு ஈடுபடுத்த வேண்டும்.

பழங்குடியின மக்களின் கலாச்சாரம், தொன்மையான அறிவு ஆகியவற்றை பழங்குடி யினர் நலத்துறை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த வேண்டும். குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவது போல், பழங்குடியினர் கலாச்சார குழுக்கள் மூலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவேண்டும்.

பழங்குடியினர்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர் களை கண்டறிவது அவசியம். ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இந்நோயை குணப்படுத்துவதற் கான வாய்ப்புகளை சுகாதாரத் துறை கண்டறியவேண்டும். இவ் வாறு நரேந்திர மோடி பேசினார்.

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x