ஆம் ஆத்மி கட்சியில் ஊழல்: வேட்பாளர் முகுல் திரிபாதி விலகல்

ஆம் ஆத்மி கட்சியில் ஊழல்: வேட்பாளர் முகுல் திரிபாதி விலகல்

Published on

ஆம் ஆத்மி கட்சி சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம், பருக்காபாதில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தை எதிர்த்து போட்டியிடும் முகுல் திரிபாதி, அக்கட்சியிலிருந்து விலகி விட்டார்.

கட்சியிலிருந்து விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் முகுல் திரிபாதி திங்கள்கிழமை கூறியதாவது: முக்கிய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்க எனது முழு திறனை பயன்படுத்தி தந்திரமாக செயல்பட வேண்டும் என்று பருக்காபாதில் உள்ள கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அறிவுரை கூறினார்.

பருக்காபாதில் 50 ஆயிரம் ஆதரவாளர்கள் இருப்பதாக முதலில் கூறினர். தேர்தல் பணிகள் தொடர்பாக பேசுவதற்காக 1,700 தொண்டர்களின் பட்டியலை அளிக்குமாறு கட்சியின் தலைவர் சஞ்சய் சிங்கிடம் கேட்டேன். அவர் அதை தரவில்லை. தேர்தலுக் காக எனது உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்தேன். கூடுதல் தொகையை செலவு செய்யும்படி கட்சியின் தலைவர்கள் என்னை வலியறுத்தினர். ஆனால், என்னால் தேவையான பணத்தைத் திரட்ட முடியவில்லை.

பருக்காபாதிற்கு அர்விந்த் கேஜ்ரிவால் வந்தபோது, கட்சியின் உள்ளூர் பிரிவு ரூ. 15 லட்சம் வசூல் செய்தது. ஆனால், ரூ.4-லிருந்து 5 லட்சம் வரைதான் செலவு செய்தது. மீதமுள்ள பணம் எங்கே சென்றது என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in