

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 5,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி- 5 ஏவுகணை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
இதனையடுத்து, மோடி தனது ட்விட்டரில், "விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் ஜேட்லி தனது ட்விட்டரில், "விஞ்ஞானிகள், இன்ஜினியர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் சேவையால் தேசம் பெருமைப்படுகிறது" என கூறியுள்ளார்.
இந்தியாவின் அக்னி- 5 ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் தாண்டும் திறன் கொண்டது. அணு ஆயுதத்தை ஏந்தியபடி 5,000 கி.மீ வரை பாயும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.