

ரூ. 1 கோடி ரொக்கம் மற்றும் ஆயுதங்கள் தரவேண்டும் என்று ரயில்வே துறையிடம் பிஹாரில் உள்ள நக்ஸலைட்டுகள் கேட் டுள்ளனர்.
அவ்வாறு தராவிட்டால் தண்டவாளங்களை தகர்ப்போம் என்றும் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.
இதுகுறித்து சமஸ்திபூரில் நேற்று ரயில்வே மண்டல பாதுகாப்பு கமாண்டர் (டி.எஸ்.சி) குமார் நிஷாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமஸ்திபூர் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்துக்கு தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதில் ராம்ஜி சஹானி என்பவர் கையெழுத் திட்டுள்ளார். இவர் தன்னை மாவோயிஸ்ட் கம்யூனிட்டி சென்டர் (எம்.சி.சி) என்ற அமைப்பின் ஏரியா கமாண்டர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே துறை தங்களுக்கு வரியாக ரூ. 1 கோடி ரொக்கம், 50 துப்பாக்கிகள், 50 தானியங்கி துப்பாக்கிகள், 3000 தோட்டாக் கள் தரவேண்டும். அவ்வாறு தராவிடில் மொட்டிஹாரி பனியாவா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களை தகர்ப்போம் என்று சஹானி கூறியுள்ளார்.
தொடர்புக்காக 3 மொபைல் எண்கள் அதில் தரப்பட்டுள்ளன. இதில் 2 போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு போன் ஒலித்தாலும் அதை யாரும் எடுக்கவில்லை.
இக்கடிதம் மற்றும் மொபைல் எண்கள் குறித்து விசாரித்து வருகிறோம். தொடர்புடைய காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் அளித்துள்ளோம்.
நாங்கள் துப்பாக்கிகள் ஸ்டாக் வைத்திருப்பதில்லை. இக்கடிதத்தில் துப்பாக்கிகள் வேண்டும் என கேட்டிருப்பதால், இது சமூக விரோதிகளின் விஷமச் செயலாகவும் இருக்கலாம். என்றாலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.