

கொச்சி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அலுவலகத்தை மாவோயிஸ்ட்டு கள் சூறையாடினர். அங்கிருந்த ஆவணங்களை எரித்து நாசப்படுத்தி உள்ளனர். இதனால் கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மாவோயிஸ்ட் தாக்குதல் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் கொச்சியின் பனம்பில்லி நகரில் உள்ள நீட்டா ஜிலாட்டின் இண்டியா நிறுவனத்தில் மாவோயிஸ்ட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், கொச்சி அருகே கலமசேரி பகுதியில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அலுவகத்தில் நேற்று காலை 9 மணிக்கு மாவோயிஸ்ட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
முகமூடி அணிந்திருந்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். ஆவணங்களை எரித்து சாம்பலாக்கினர். பின்னர் அவர் கள் தப்பிச் சென்றனர். தக வல் அறிந்து போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் கே.ஜி.ஜேம்ஸ் கூறும்போது, ‘‘நெடுஞ்சாலை துறை ஆணைய அலுவலகத்தில் தாக்குதல் நடந்தது உண்மைதான். இது மாவோயிஸ்ட்டுகளின் வேலைதான். அலுவலகத்தில் மாவோயிஸ்ட்டுகள் வீசி சென்ற துண்டுப் பிரசுரங்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
கடந்த ஜனவரி 25-ம் தேதி, வடக்கு கேரளா வயநாடு பகுதியில் மாநில சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுற்றுலா தலத்தில் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா பங் கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்ட்டுகள் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்நிலையில் கொச்சியில் மீண்டும் தாக்குதல் நடந்திருப்பதால் கேரளா வில் பதற்றம் ஏற்பட்டுள்ளது