Published : 22 Apr 2014 08:33 AM
Last Updated : 22 Apr 2014 08:33 AM

கலப்பு திருமணத்துக்கு ‘காப்’ பஞ்சாயத்து அனுமதி: ஹரியாணாவில் ஜாதிய மோதல் குறைய வாய்ப்பு

கலப்புத் திருமணத்துக்கு ஹரியா னாவின் மிகப்பெரிய ஜாதிப் பஞ்சாயத்தான “சத்ரோல் காப்” ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் இம்மாநிலத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறும் மோதல்கள் மற்றும் கொலைகள் குறைவதற்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந் தவர்கள் திருமணம் செய்து கொள்வது, ஒரே கோத்திரத்தில் திருமணம், சுற்று வட்டாரத்தில் உள்ள 42 கிரமங்களுக்குள் திருமணம் ஆகியவற்றை 600 ஆண்டு கால பாரம்பரியம் என்ற பெயரில் “காப்” பஞ்சாயத்துக்குள் எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் ஹரியாணாவின் மிகப் பெரிய “காப்” பஞ்சாயத்தான, ஹிசார் மாவட்டத்தில் உள்ள “சத்ரோல் காப்”, கலப்புத் திருணத்துக்கு ஞாயிற்றுக் கிழமை அனுமதி வழங்கியது. மேலும் சுற்றுவட்டார 42 கிராமங்களுக்குள் திருமணம் செய்வதற்கான தடை யையும் நீக்கியது. என்றாலும் அதே கிராமத்தில் மற்றும் எல்லையை ஒட்டிய கிராமத்துடன் திருமண உறவு, ஒரே கோத்திரத்தில் திருமணம் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கிறது. பெற்றோரின் சம்மதத்தின் பேரிலேயே திருமணம் நடைபெற முடியும் என்ற கட்டுப்பாடும் தொடர்கிறது. எனினும் இந்த சீர்திருத்தம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

“காப்” பஞ்சாயத்துக்களின் கடும் விதிகள் காரணமாக கிராமப் பகுதிகளில் புதுமணத் தம்பதி கொடுமைக்கு ஆளாவது, தற்கொலைகள், கௌரவக் கொலை, ஜாதி மோதல் ஆகியவை இது நாள் வரை நிலவி வருகிறது. இதனால் இப் பகுதி இளைஞர்கள் அண்டை மாநிலப் பெண்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்துள்ளது.

ஹிசார் மாவட்டத்தில் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள 42 கிராமங்கள் மற்றும் 36 ஜாதிகள் சத்ரோல் பஞ்சாயத்தின் கீழ் வருகின்றன. இங்கு ஜாட் சமூகத்தினர் 60 சதவீதம் பேர் உள்ளனர். சீர்திருத்தம் குறித்து சத்ரோல் பஞ்சாயத்தின் தலைவர் இந்தர் சிங் சுபேதார் கூறுகையில், “நமது நீண்டகால பாரம்பரியம் நிலைத்திருப்பதற்கு இனி இதுதான் ஒரே வழி. பிற மாநிலப் பெண்கள் நமது குடும்பத்துடன் ஒன்றிச் செல்வதற்கு அதிக காலம் ஆகிறது. எனவே சில கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளோம். இந்த சீர்திருத்தம் ஹரியாணாவில் புரட்சிர மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

சத்ரோல் பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு “காப்” பஞ் சாயத்தின் தலைவரான சுனில் ஜக் லான் கூறுகையில், “நாங்கள் இதை வரவேற் கிறோம். இனி “காப்” பஞ் சாயத்துகளை மக்கள் எதிர் மறையாக பார்ப்பது குறையும். இந்த சீர்திருத்தம் மேலும் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும்” என்றார்.

ஹரியாணாவின் பல்வேறு கிராமங் களில் களப்பணியாற்றிய டெல்லி பல்கலைக்கழக ஆய்வு மாணவர் நீலம் ஜெயின் கூறுகையில், “இது ஒரு முற்போக்கான முடிவு. மூட நம்பிக்கைகள் அடிப்படையிலான சமூகத் தவறுகளை களைவதற்கு இது தொடக்கமாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x