

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டர் பறப்பதற்கு முன் விமானிகள் தீயை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மைசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச் சர்கள் கே.ஜே.ஜார்ஜ், மகாதேவப்பா மற்றும் இணை செயலாளர் ரம்யா உள்ளிட்ட 3 அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் ஹெலிகாப்டரில் பயணிக்க இருந்தனர். அனைவரும் ஏறி அமர்ந்த தும் ஹெலிகாப்டரின் இன்ஜின் இயக்கப் பட்டது.
ஹெலிகாப்டர் பறப்பதற்கு சில வினாடி களுக்கு முன், சைலன்ஸரில் வழக்கத் துக்கு மாறான சத்தம் வந்துள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்த விமானிகள் உன்னிகிருஷ்ணன், தவுல்தா ஆகியோர் சைலன்ஸரை பார்த்தனர். அங்கு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ந்த அவர்கள், உடனடியாக ஹெலிகாப்டர் இயக்கத்தை நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவசர, அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். மேலும் சைலன்ஸரில் பற்றிய தீ உடனடியாக அணைக் கப்பட்டது. இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.