Last Updated : 01 Jan, 2015 05:50 PM

 

Published : 01 Jan 2015 05:50 PM
Last Updated : 01 Jan 2015 05:50 PM

மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.708.50-ஆக குறைந்துள்ளது.

சென்னையில் மானியம் அல்லாத 14.2 கிலோ சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.705-க்குக் கிடைக்கும்.

தொடர்ந்து 5-வது முறையாக மானியம் இல்லாத சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மே, 2009-ற்குப் பிறகு சர்வதேச கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்ததையடுத்து சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மானியமுள்ள சிலிண்டர் மறுநிரப்பு தற்போது ரூ.417-க்கு டெல்லியில் கிடைத்து வருகிறது.

மானியம் இல்லாத அல்லது சந்தை விலை சிலிண்டர் விலை டிசம்பர் 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.113 என்று அதிகபட்சமாக குறைக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு ஒரு முறை விலைகுறைப்பு என்ற அடிப்படையில் வீட்டு உபயோகமல்லாத சிலிண்டர் விலை ரூ.214 குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x