நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயம்

நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயம்
Updated on
1 min read

புதுடெல்லி: நே​பாள வெள்​ளத்​தில் 288 இந்தியர்கள் மாயமானதாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் அதிகாரப்பூர்வமாக அறி​வித்​துள்​ளது. மத்​திய வெளி​யுறவு அமைச்சகத்​தின் செய்தி தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் டெல்லி​யில் நேற்று செய்​தி​யாளர்களிடம் கூறும் போது, ‘‘நேபாளத்துக்கு சென்ற 288 இந்​தி​யர்​களைத் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை.

இவர்​களில், திரிசூலி ஒன் பவர் திட்​டத்​தில் பணிபுரி​யும் 73 இந்தியர்​களும் அடங்​கு​வர். இவர்​களைப் பற்​றிய கூடு​தல் விவரங்களைப் பெறு​வதற்​காக, காத்​மாண்​டு​வில் உள்ள நமது தூதரகம் திட்​டத் தலை​வருடன் தொடர்​பில் உள்​ளது. காணா​மல் போன இந்​தி​யர்​களைக் கண்​டறிவதற்​கும், மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்கு உதவுவதற்​கும், காத்​மாண்​டு​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் நேபாள அதி​காரி​கள் மற்​றும் பிற தொடர்புடைய முகமை​களு​டன் வெளி​யுறவு அமைச்​சகம் தொடர்பில் உள்​ளது''என்​றார்.

நேபாளத்​தில் மாய​மான இந்​தி​யர்​கள் எந்​தெந்த மாநிலத்தை சேர்ந்​தவர்​கள் என்​பது குறித்து ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் வழங்​கிய பட்டியல்: திரிசூலி-1 மின் திட்​டத்​தில் பணி​யாற்றி வந்த 73 இந்தியர்​கள். சாம்​ராட் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்​திரை மேற்​கொண்ட தமிழ்​நாட்டை சேர்ந்த 37 பேர் ஃப்ளைஎவரெஸ்ட் டிராவல்ஸ் நிறு​வனம் மூலம் யாத்​திரை மேற்​கொண்ட 49 தமிழக நாட்​டினர். சாம்​ராட் டிராவல்ஸ் உதவி​யுடன் பயணம் செய்த மேற்​கு​வங்​கத்​தைச் சேர்ந்த 32 பேர் கேரளத்தைச் சேர்ந்த 33 பேர் பல்​வேறு மாநிலங்​களைச்​ சேர்​ந்​த 64 பேர்​.

சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு அவசியம்

நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ‘‘சீனா, நேபாளம், இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சூழலியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இருக்கிறது. அரசியல் போட்டிகள் இருக்கலாம். ஆனால் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பிராந்தியம் இமயமலைப் பகுதி என்பதால், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என வலியுறுத்தினார்.

நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயம்
ஈஷா குழுவில் 80 பேர் எங்கே? - எல்லையில் கண்ணீருடன் சத்குரு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in