

டெல்லி முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக ஆட்சி மன்றக் குழுதான் இறுதி முடிவு எடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இவர் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறும்போது, “முதல்வர் வேட்பாளர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஜக ஆட்சி மன்றக் குழு கூடி இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும். இதற்கு முன்பு நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் முதல்வர் வேட் பாளர்கள் தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டனர்.
சில நேரங்களில் தேர்தலுக்கு பின்புதான் முதல்வர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்” என்றார். மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான பாஜக ஆட்சி மன்றக் குழுவில் அக் கட்சியின் தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.