

டெல்லி உத்தம் நகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் பால்யனுக்குச் சொந்தமான குடோனில் இருந்து 5000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு அங்கு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஹரியாணா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 5964 மது புட்டிகள் ஒரு குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில் அந்த குடோன் டெல்லி உத்தம் நகர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் பால்யனுக்குச் சொந்தமானது என தெரிகிறது.
இருப்பினும் அதை உறுதி செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் குடோன் உரிமையாளர் நரேஷ் பால்யன் என்பது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.