

கர்நாடக கலால்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கடந்த 3 தினங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து மேலும் 7 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கலால்துறை அமைச்சர் சதீஸ் ஜார்கிஹோளி கடந்த 3 தினங்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வேறு கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு வந்த சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தே சதீஷ் ஜார்கிஹோளி ராஜினாமா செய்தார்.
சதீஷ் ஜார்கிஹோளியை சமாதானம் செய்யும் முயற்சியில் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜின் ஆலோசகரும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான கெம்பையா பெல்காமில் முகாமிட்டுள்ளார். ‘ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறமாட்டேன். தனக்கு சமூக நலத்துறையை வழங்க வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப் படுகிறது.
இதனிடையே சதீஷ் ஜார்கி ஹோளி நேற்று மாலை சித்தராமை யாவை சந்திக்க வருவதாக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார். ஆனால் அவர் சித்த ராமையாவின் சந்திப்பை புறக்கணித்துள்ளார்.
ராஜினாமா தொடருமா?
சதீஷ் ஜார்கிஹோளியைத் தொடர்ந்து, 5 முதல் 7 அமைச்சர் கள் ராஜினாமா செய்ய திட்ட மிட்டுள்ளதாக கர்நாடக அரசி யல் வட்டாரத்தில் தகவல் வெளி யானது. எனவே, அமைச்சர் களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக சித்தராமையா நேற்று தனது இல்லத்தில் அமைச்சரவை கூட்டத்தை திடீரென கூட்டினார். இதில் முக்கிய அமைச்சர்களான ஜார்ஜ், டி.கே.சிவக்குமார், மகாதேவ பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு சித்தராமையா செய்தியாளர் களிடம் பேசும்போது, ‘‘ஜார்கி ஹோளி உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே, அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துக்கூடாது. கூடிய விரைவில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார்.
அமைச்சர்களின் ராஜினாமா மிரட்டலால் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர் சகர்கள் தெரிவித்துள்ளனர்.