

தெற்கு காஷ்மீர் குல்காம் நகரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் போலீஸ் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிவிலியன் ஒருவர் காயமடைந்தார்.
ஜஹூர் அகமது தார் என்ற போலீஸ் காவலர், குல்காம் மாவட்டம், ஹோமஷலிபுக் தொகுதி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். அகமது தார் நேற்று காலை, குல்காம் நகரின் ரெட்பானி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிக்குப் புறப்பட்டார்.
அகமது இலாகி என்பவருடன் இவர் மோட்டார் பைக்கில் செல்லும்போது, அவரது வீட்டுக்கு அருகிலேயே தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இந்நிலையில் போலீஸ் காவலர் அகமது தார் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். அகமது இலாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.