

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் பதிவானது.
இதைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குளிரான நாள் என செவ்வாய்க்கிழமையை வானிலை ஆய்வாளர்கள் பதிவு செய் துள்ளனர்.
1992ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமைதான் அதிகபட்ச குளிர் பதிவாகியுள்ள தாக வானிலை ஆய்வு மைய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பல ரயில்களின் சேவை தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களும் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித் தாலும், இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.