தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: மத்திய அமைச்சர் நக்விக்கு ஜாமீன் - தண்டனைக்கு தடை விதிப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: மத்திய அமைச்சர் நக்விக்கு ஜாமீன் - தண்டனைக்கு தடை விதிப்பு
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் மத்திய இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு உத்தரப்பிரதேச மாவட்ட நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிர தேசம் ராம்பூர் பகுதியில் முக்தர் அப்பாஸ் நக்வி பிரச்சாரம் செய்தார். அப்போது அவரது காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நக்வியும் அவரது ஆதரவாளர்களும் அங்குள்ள போலீஸ் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறைத் தண் டனை விதித்தது. மேலும், 18 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப் பளித்தது.

இதுதொடர்பான மேல்முறை யீட்டு மனு மாவட்ட நீதிபதி பி.கே. கோயல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நக்வி தரப்பில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வழக்கு தொடரப் பட்டுள்ளது. காவல்துறை கூறியதுபோல் சம்பவ இடத்தில் வன்முறை எதுவும் நிகழவில்லை. பாஜகவினர் அமைதியான முறையில்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நக்வி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நக்விக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாவட்ட நீதிமன்றம் நிறுத்தி வைத் தது. மேலும், அவருக்கு இடைக் கால ஜாமீனும் வழங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in