

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி. பராக், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்டவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர் பாக சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்கு விசா ரணையின் ஒருபகுதியாக விசாரணை நிலவர அறிக்கை மற்றும் சில ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உறையில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.
இவ்வழக்கில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தும்படியும், விசாரணை நிலவரம் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும்” நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
இதையடுத்து, மன்மோகன் சிங், அவரின் அப்போதைய முதன்மைச் செயலாளர் டிகேஏ நாயர், அப்போதைய தனிச் செயலாளர் பிவிஆர் சுப்பிரமணியம் உட்பட வழக்கில் தொடர்புடைய சிலரின் வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிஐ அதனை மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையாக நேற்று தாக்கல் செய்தது. ‘பல்வேறு நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தை அறிக்கையாக தாக்கல் செய்வதாகவும், வழக்கில் அடுத்த கட்ட விசாரணை முடியும் வரை மூடிய முத்திரையிட்ட உறையைத் திறக்க வேண்டாம்’ எனவும் நீதிமன்றத் திடம் சிபிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வரும் பிப்ரவரி 19-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஸாவிலுள்ள நிலக்கரி சுரங் கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக, சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.