அசாமில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது

அசாமில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது
Updated on
1 min read

அசாம் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கர்பி அங்லாங் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முக்த்யா ஜோதி மஹந்தா கூறியதாவது:

கர்பி அங்லாங் மாவட்டம் தோலமோரா காவல் நிலையத்துக்குட்பட்ட ரோங்டாங் கிராமத்தில் கர்பி மக்கள் விடுதலைப்புலிகள் (கேபிஎல்டி) அமைப்பைச் சேர்ந்த 5 பேர் ஊடுருவியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினரும் ராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பேர் பலியாயினர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர்.

இந்த நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட தீவிரவாதி களிடமிருந்து 7.65 எம்எம் பிஸ்டல்கள், ஒரு ரிவால்வர், வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதுதவிர, ஐக்கிய மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்த அசாதி பே என்பவரை பகோலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸார் கைது செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in