

ஜும்மா மசூதி இமாம் சயீது அகமது புகாரியை காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி சந்தித்துப் பேசியதில் தவறில்லை, இதில் தேர்தல் நடத்தை விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நாங்கள் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறோம். அதற்காக நாங்கள் நாத்திகவாதிகள் அல்ல. சங்கராச்சாரியார்கள், சாதுக்கள், இமாம்களை சந்தித்துப் பேச காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஜும்மா மசூதி இமாம் சயீது புகாரியை சோனியா சந்தித்துப் பேசியதில் தவறு இல்லை. இந்து மதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு குத்த கைக்கு விடப்படவில்லை என்று தெரிவித்தார்.
காஜியாபாதில் நேற்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, மாட்டிறைச்சி உற்பத்தியை அதிகரிக்கச் செய் யும் வகையில் “பிங்க்” புரட்சிக்கு காங்கிரஸ் கட்சி அதிக முக்கியவத் துவம் அளிக்கிறது. இதனால் கிராமங்களில் மாடுகள் கொல்லப்பட்டு கிராம பொரு ளாதாரம் அழிந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மானியம் வழங்கப்படுவதாக மோடி குற்றம் சாட்டுகிறார். இது பொய் குற்றச்சாட்டு. மாட்டி றைச்சி ஏற்றுமதிக்காக எந்தச் சலுகை யும் அளிக்கப்படவில்லை. நாட்டில் பசு வதை ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாட்டிறைச்சி வகைகளின் ஏற்று மதிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அந்தந்த மாநில அரசுகள்தான் மாட்டிறைச்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கின்றன.
குஜராத்தில் ஏராளமான மாட்டி றைச்சிக் கூடங்கள் உள்ளன. அந்த மாநிலத்தின் மாட்டிறைச்சி ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 2003-04ம் ஆண்டில் 3.5 மில்லியன் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப் பட்டது என்று ஆனந்த் சர்மா குற்றம்சாட்டினார்.