திருப்பதியில் மான்களை வேட்டையாடிய சிறுத்தை

திருப்பதியில் மான்களை வேட்டையாடிய சிறுத்தை
Updated on
1 min read

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம் அருகே இரண்டு மான்களை சிறுத்தை வேட்டையாடி கொன்றதால் பொது மக்கள் பெரும் பீதி அடைந் துள்ளனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து நகர எல்லை களில் சிறுத்தை நடமாட்டம் இருப்ப தாக கடந்த சில நாட்களாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின் றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை  வெங்க டேஸ்வரா வேத பல்கலைக்கழகத் தின் அருகே இரண்டு மான்களை சிறுத்தை வேட்டையாடி கொன் றுள்ளது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி உள்ளதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதேபோன்று திருப்பதி ரூயா அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் பிரிவு அருகிலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு நோயாளிகள், அவர்களது உறவினர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இங்கும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அனந்தபூர் மாவட்டம் பெனுகொண்டா பகுதியில் உள்ள ராஜேஸ்வரி காலனி பகுதியிலும் நேற்று இரண்டு ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதேபோன்று, கர்னூல் சிறுத்தங்கல் பகுதியிலும் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். திருப்பதி, அனந்தபூர், கர்னூல் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இந்தப் பகுதிகளில் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in