13 சாவடிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 60 தீவிரவாதிகள் - எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் பேட்டி

13 சாவடிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 60 தீவிரவாதிகள் - எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் பேட்டி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் சம்பா பகுதியில் உள்ள 13 எல்லை சாவடிகள் மீது பாகிஸ் தான் ராணுவம் நேற்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதனிடையே சுமார் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பா பகுதியில் புதன்கிழமை காலை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும் இந்தியாவின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 4 பேரும் பலியாயினர். நேற்று அதிகாலை எல்லை சாவடிகள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலை கணக்கிட்டால் கடந்த 3 நாட்களில் 3 முறையும் கடந்த 8 நாட்களில் 7 முறையும் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜம்முவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமை இயக்குநர் ராகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சம்பா பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள 13 சாவடிகள் மீது வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. காலை 6 மணி வரை நீடித்த இந்த சண்டையில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

50 முதல் 60 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வுக்குள் ஊடுருவுவதற்காக எல்லையில் காத்திருக்கிறார்கள். ஊடுருவும் முயற்சி நிறை வேறாததால் விரக்தி அடைந்த பாகிஸ்தான், சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் அத்துமீறல் குறித்து பாகிஸ்தானிடம் முறைப்படி ஆட்சேபம் தெரிவிக்கப்படும்.

அதேநேரம் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கவும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் நாங்கள் முதலில் தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. நாங்கள் பதிலடி கொடுப்போம். இதனால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

உள்நாட்டு பிரச்சினை வெடிக்கும்போதெல்லாம் சொந்த நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது அங்கு தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. இதனால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான், எல்லையில் தாக்குதலை தொடங்கி உள்ளது.

இவ்வாறு சர்மா தெரிவித்தார்.

விரைவில் இயல்புநிலை திரும்பும்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “பாகிஸ் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது. இந்தப் பிரச்சினை தொடர்பாக இருதரப்பு தூதரக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பும்” என்றார்.

இதற்கிடையே, இஸ்லா மாபாதில் உள்ள இந்திய துணைத்தூதரை நேற்று முன்தினம் அழைத்துப் பேசிய பாகிஸ்தான் அதிகாரிகள், இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஆட்சேபம் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in