ஜார்க்கண்டில் டார்ச் வெளிச்சத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: பாஜக எம்எல்ஏ புகார்

ஜார்க்கண்டில் டார்ச் வெளிச்சத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: பாஜக எம்எல்ஏ புகார்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் டார்ச் வெளிச்சத் தில் 40 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஜெய்பிரகாஷ் சிங் போக்தா நேற்று பிரச்சினை எழுப்பி பேசும் போது, “குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம்களை நடத்தும்போது அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனாலும், சத்ரா மாவட்டத்தில் டார்ச் வெளிச்சத்தில் 40 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாருடைய உத்தரவின் பேரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in