

கர்நாடக மாநிலம் சிருங்கேரி யில் உள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் 37-வது பீடாதிபதியாக ஆந்திராவை சேர்ந்த குப்ப வெங்கடேஸ்வர பிரசாத ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சம்ஸ்கிருதத்தையும் தர்க்க சாஸ்த்திரத்தையும் கற்றுத் தேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலம் சிருங் கேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியாக ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.
தனது 25 ஆண்டு பயணத் தில் உலகம் முழுவதும் பல எண்ணற்ற அரும்பணிகளை மேற்கொண்டார். பல்வேறு கோயில்களை எழுப்பியதோடு மட்டுமில்லாமல் நாடு தழுவிய ஆன்மிக பயணங்களை மேற்கொண்டார்.
தனது வெள்ளி விழா ஆண்டை கடந்த 4-ம் தேதி கொண்டாடிய ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 37-வது பீடாதிபதி யாக ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத ஷர்மாவை நியமித்தார். இவர் பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் சிஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பெற்றோர் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகேயுள்ள அனந்தவரத்தை சேர்ந்த குப்ப சுப்ரமண்யா அவதான், சீதா நாகலட்சுமி தம்பதியர் ஆவர். ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத ஷர்மா 1993-ம் ஆண்டு திருப்பதியில் பிறந்தார். தனது 5 வயதில் வேதங்களையும், உபநிடதங்களையும் பயிலத் தொடங்கினார்.
2009-ம் ஆண்டு முதல் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளிடம் வேதங்களையும் சாஸ்திரங் களையும் தற்போது வரை பயின்றுவருகிறார்.
கவுண்டின்ய கோத்திரத் தில் பிறந்த இவர் சம்ஸ் கிருதத்தையும் தர்க்க சாஸ்த் திரத்தையும் கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத ஷர்மாவை பீடத்தின் 37-வது பீடாதிபதியாக நியமனம் செய்யும் சந்நியாச விழா, சிருங்கேரி மடத்தில் ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.