Published : 25 Jan 2015 10:22 AM
Last Updated : 25 Jan 2015 10:22 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் 12 வேட்பாளர்கள் தகுதியானவர்கள் அல்ல - கட்சித் தலைமையிடம் பிரசாந்த் பூஷன் புகார்

வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் போட்டி யிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் தேர்வுமுறையை கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இம்முறை சரியாக நடத்தவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரை அன்னா ஹசாரே போராட்டம் முதல் கேஜ்ரிவாலுடன் இணைந்து செயல்படும் பிரசாந்த் பூஷண் எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண், 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் தவறாக தேர்வு செய்யப் பட்டுள்ளதாகவும், அவர்களை நீக்கிவிட்டு வேறு நபர்களை நிறுத்தவேண்டும் என்றும், கட்சியின் உயர்நிலைக் குழுவிடம் கடந்த வாரம் கடிதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பெண் மீது தாக்குதல், நில அபகரிப்பு என பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பிரஷாந்த் பூஷண் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 12 பேரில் பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆம் ஆத்மிக்கு வந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் இறுதி நாளான கடந்த 21-ம் தேதி, பூஷணின் புகார் பட்டியலில் இருந்த 12 பேரில் இருவர் மட்டும் மாற்றப்பட்டனர். மற்றவர்கள் மாற்றப்படாததால் கேஜ்ரிவால் மீது பூஷண் அதிருப்தியில் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x