Last Updated : 05 Jan, 2015 05:28 PM

 

Published : 05 Jan 2015 05:28 PM
Last Updated : 05 Jan 2015 05:28 PM

பிஹாரில் 1,700 இந்துக்கள் புத்த மதத்துக்கு தழுவல்

பிஹாரில் சுமார் 1,700 இந்துக்கள் புத்த மதத்தைத் தழுவியுள்ளதாக, அம்மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பிஹாரில் சுமார் 1,700 இந்துக்கள் புத்த மதத்துக்கு மாறியுள்ளனர். இதில் 1,200 பேர் சரண் மாவட்டத்தின் பைன்கந்த்பூர் மற்றும் குதர்பாகா என்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மதம் மாறியவர்களில் பலர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

தங்களது சமூகத்தினர் மீதான தொடர் அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமல் மதமாற்றம் செய்த கொண்டதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

புத்த மதம் ஒற்றுமையை போதிப்பதாலும் அதில் பாகுபாடு பார்க்கப்படாததுமே தாங்கள் அந்த மதத்துக்கு மாற காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்" என்றார் அவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x