

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பான வழக்கில் உதவக் கோரி துனிசியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் நீதித் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் (லெட்டர்ஸ் ரொகேட்டரி-எல்ஆர்) அனுப்பி வைத்துள்ளது.
முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலி காப்டர் வாங்குவது தொடர்பாக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் ரூ.3,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசிடமிருந்து பெறுவதற் காக இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக அந்த நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை யடுத்து நம் நாட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டு சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு தொடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் விசாரணைக்கு சட்ட ரீதியாக உதவக் கோரி துனிசியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது. முன்னதாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து இதற்கான அனுமதியை பெற்றிருந்தது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத் துடனான விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பான அந்நிறுவனத் தின் அறிக்கை மற்றும் பரிவர்த்த னைகள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் தேவையான ஆவணங் களை இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காக இந்த எல்ஆர் நடைமுறை பின்பற்றப்படுகிறது.