Published : 23 Jan 2015 10:32 AM
Last Updated : 23 Jan 2015 10:32 AM

பெண் சிசு கருக்கலைப்பை ஒழிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பெண் சிசு கருக்கலைப்பு மோசமான மனநிலையைக் காட்டுவதாகவும் இந்த நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

‘பெண் குழந்தைகளைக் காப் போம்-கல்வி அறிவு புகட்டுவோம்’ என்ற பிரச்சாரத்தை ஹரியாணாவின் பானிபட் மாவட்டத்தில் நேற்று தொடக்கி வைத்த அவர் பேசிய தாவது:

ஆண் குழந்தைகளை அனை வரும் விரும்புகிறார்கள். ஆனால் புகுந்த வீட்டின் சொத்து என்ற நம்பிக்கையில் பெண் குழந்தை களை விரும்புவதில்லை. இதனால் நாட்டில் ஆண், பெண் விகிதம் குறைந்து வருகிறது.

குறிப்பாக ஹரியாணாவில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆண்களுக்கு நிகரான பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பெண் சிசுக்கொலையே முக்கிய காரணமாக உள்ளது. இது ஹரியாணாவில் மட்டும் அல்ல நாடு முழுவதும் இதுபோன்ற மனநிலை பாதிப்பு உள்ளது. இந்த எண்ணம், மனநிலையை ஒழிக்கவேண்டும்.

அதுவும் மருத்துவர்களே பெண் சிசுக்கருவை கலைப்பது கண்டிக்கத் தக்கது. அது சமூகத்துக்கு எதிரான துரோகம் ஆகும். இந்த குற் றத்தை செய்து கொண்டு 21-ம் நூற்றாண்டின் குடிமக்கள் என்று கூறிக்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

18-ம் நூற்றாண்டில் பெண் குழந்தைகளை பிறக்கவிட்டு சிறிது காலம் வாழவாவது விட்டார்கள். இப்போது தாயின் கருப்பையில் வளரும்போதே பெண் சிசுவை அழிக்கிறோம். இது 18-ம் நூற்றாண் டின் மனநிலையைவிட மோசமா னது. பெண் சிசுக்கருவை அழிக்கக் கூடாது என்று நாம் சபதம் ஏற்க வேண்டும்.

முதல் விண்வெளி வீராங்கனை யான கல்பனா சாவ்லாவை உருவாக் கிய ஹரியாணாவில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் நடை பெறுவது வேதனையாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பெண் குழந்தைகளுக்கான நலத் திட்டத் தையும் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படும். அதில் சேமிக்கப்படும் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்குவதுடன் வருமான வரியிலும் விலக்கு அளிக்கப் படும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, ஹரியாணா ஆளுநர் கப்டான் சிங், மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், நடிகை மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெண் சிசுக்கொலையைத் தடுப்பது தொடர்பாக நடிகை மாதுரி தீட்சித் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வார். இந்த பிரச்சாரம் முதல்கட்டமாக 100 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x