Last Updated : 21 Jan, 2015 04:34 PM

 

Published : 21 Jan 2015 04:34 PM
Last Updated : 21 Jan 2015 04:34 PM

ரூ.51 கோடி கேட்டு ராஜ்கோட் செய்தித்தாள் மீது ரவீந்திர ஜடேஜா அவதூறு வழக்கு

ராஜ்கோட்டிலிருந்து வெளியாகும் மாலை நாளிதழ் ஒன்றின் மீது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அவதூறு வழக்கு தொடர்ந்து ரூ.51 கோடி இழப்பீடு கோரியுள்ளார்.

'அப்தக்' என்ற அந்த மாலை நாளிதழில் ரவீந்திர ஜடேஜா பற்றி வெளியான செய்தி ஒன்றே இதற்கு காரணம். அதாவது. ஜடேஜா மற்றும் அவரது வர்த்தகக் கூட்டாளி ஜெனீசி அஜ்மீரா ஆகியோர் நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள பாலி தங்கர் என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாக 20, நவம்பர் 2014 அன்று அந்தச் செய்தித்தாளில் செய்தி ஒன்று வெளியானது.

இதனையடுத்து ரவீந்திர ஜடேஜா, தனது பெயருக்கு அந்தப் பத்திரிகை களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த செய்தித் தாளின் ஆசிரியர் சதீஷ் மேத்தா மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவர் 4ஆம் தேதி அந்த செய்தித்தாள் ஆசிரியர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது பற்றி ஜடேஜாவின் வழக்கறிஞர் ஹிரன் பட் கூறுகையில், “உண்மையை சரிபார்க்காமல் அந்தச் செய்தித்தாள் இதனை வெளியிட்டுள்ளது. ஜடேஜா தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்ட, நில அபகரிப்பில் சிக்கியுள்ள தங்கர் என்பவரை சந்தித்ததில்லை. மேலும் உணவு விடுதி வர்த்தகத்தில் ஜடேஜாவின் கூட்டாளி அஜ்மீரா என்றும் அந்த செய்தித்தாள் கூறியுள்ளது, இதுவும் முற்றிலும் தவறு. அஜ்மீரா ஜடேஜாவுடன் எந்த வித வர்த்தக தொடர்பும் இல்லாதவர்.

நாங்கள் செய்தி ஆசிரியருக்கு நோட்டீஸ்கள் அனுப்பினோம், ஆனால் அவர் பதில் அளிக்கத் தவறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.” என்றார்.

ஜடேஜா தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இருந்து வருகிறார். தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x