

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி விரைவில் பாஜகவில் இணை யும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சுரேஷ் கோபி, பிரதமரை புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணையவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சுரேஷ் கோபி “பாஜகவில் இணையுமாறு அக் கட்சித் தலைவர்கள் அழைத்தால், மறுக்க மாட்டேன்” என்றார்.
இதுபற்றி கேரள பாஜக தலைவர் வி.முரளிதரன் கூறும்போது, “சுரேஷ் கோபி, பாஜகவில் இணைய விரும்பினால் அதை முழு மனது டன் வரவேற்கிறோம். சில மாதங் களுக்கு முன் நாங்கள் அவரிடம் பேசினோம். மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து அப்போது விவா தித்தோம். மத்தியில் மோடி அரசு அமைந்த பிறகு நாட்டில் ஏற் பட்டுள்ள மாற்றங்களை அவர் பாராட்டினார்” என்றார்.
சுரேஷ் கோபியின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு சமீபத்தில் கண்டித்தது.
கேரளத்தில் பாஜக அமைப்பு ரீதியாக வலுவாக இருந்தாலும், சட்டப்பேரவை மற்றும் மக்கள வைக்கு இதுவரை பிரதிநிதிகளை அனுப்ப முடியவில்லை.
இந்நிலையில் பல்வேறு துறை பிரபலங்களை கட்சியில் இணைத்து, மக்கள் ஆதரவை விரிவாக்குவதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம் என மாநில பாஜக கருதுகிறது.