Published : 17 Jan 2015 01:55 PM
Last Updated : 17 Jan 2015 01:55 PM

வைகாசி மாத அனுஷ நட்சத்திர தினமே திருவள்ளுவர் பிறந்த நாள்: இல.கணேசன்

வைகாசி மாதத்தில் அனுஷ நட்சத் திரம் வரும் நாளே திருவள்ளுவர் பிறந்த நாள் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி யில் உள்ள திருக்குறள் பேரவையின் 32-ம் ஆண்டு இலக்கியப் பெருவிழா நேற்று தொடங்கியது. இதில் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘தன்னிகரில்லா தமிழ்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் திருக்குறள் பேரவைத் தலைவர் கோபிநாத், மேல்சித்தாமூர் பட்டாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு இல.கணேசன் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய விழா என்பதை பிரதமரிடம் எடுத்து கூறினேன். இளைஞர்களிடம் வீர உணர்வு குறைந்து வருகிறது. வீரத்தை வெளிக்கொணரும் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதால் காளைகளை அடிமாட்டுக்கு விற்பது தடுக்கப்பட வேண்டும். அரசு அறிவித்த திருவள்ளுவர் ஆண்டு என்பது தை முதல் நாளில் தொடங்குகிறது. அதில் எதிர்ப்பு கிடையாது. ஆனால் இந்த நாளை திருவள்ளுவர் தினம் என திமுக அறிவித்துள்ளது. இந்த நாளில் திருவள்ளுவர் பிறந்தார் என்பது வரலாற்று முரண்பாடு. வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திர தினத்தில்தான் திருவள்ளுவர் பிறந்த நாளாக மயிலாப்பூர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. அரசிதழிலும் இதுவே வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் பின்னணி ஆய்வுக்குரியது. திட்டமிட்டு ஒரு முயற்சி நடக்கிறது. இதைக் கண்டிப்பது பாஜக மட்டுமே.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும். கூட்டணியில் உள்ள எந்த கட்சி போட்டியிடும் என்பது ஓரிரு நாளில் முடிவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x