

டெல்லியில் நிலையான ஆட்சிக்கு மோடியின் கரங்களை பற்றிக் கொள்ளுங்கள் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அங்கு மிகவும் பிரபலமடைந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. ஆம் ஆத்மியும், பாஜக, காங்கிரஸ் என கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், டெல்லி நகர் முழுவதும் பாஜக வைத்துள்ள பிரச்சார போஸ்டர் ஒன்று பெரியளவில் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது.
ஆரஞ்சு நிற பின்னணியில் மோடி வணக்கம் கூறும் அந்த போஸ்டரில் இந்த வாசகம்தான் எழுதப்பட்டிருக்கிறது, "தர்ணா செய்பவர்களை கையை அல்ல டெல்லி செல்ல மோடியின் கைகளை பற்றிக்கொள்ளுங்கள்". அதாவது டெல்லியில் நிலையான ஆட்சி அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
போராட்டங்கள், தர்ணாக்கள் என இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை புறக்கணியுங்கள் என பொருள்படும் வகையில் இந்த வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியில் (“Dharna walo ka chhodo haath, Delhi chalen Modi ke saath”) என எதுகை, மோனை சுவையுடன் இந்த வாசகம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சார போஸ்டர் அங்கு மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.
டெல்லி தேர்தல் பிரச்சாரத்தை பாஜக ராம்லீலா மைதானத்தில் துவக்கியது. பிரச்சாரத்தை தொடங்கிவைத்து பேசிய மோடி, "டெல்லிக்கு தேவை வளர்ச்சி, அராஜகம் அல்ல. அவர்கள் தர்ணா செய்வதில் தேர்ந்தவர்கள், நாங்கள் நல்லாட்சி நடத்துவதில் வல்லவர்கள்" என பேசியிருந்தார். இதன் அடிப்படையிலேயே தற்போது மெகா ஹிட்டாகியுள்ள போஸ்டர் வாகமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.