Published : 03 Jan 2015 12:09 PM
Last Updated : 03 Jan 2015 12:09 PM

பீகே திரைப்படம் ரூ.276 கோடி வசூல்

ஆமீர் கான் நடித்துள்ள பீகே திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ. 276 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

தூம் 3, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய திரைப்படங்களின் ஒட்டு மொத்த வசூல் அளவை பீகே தாண்டிவிட்டது. தூம் 3 திரைப் படத்துக்கு ரூ. 265 கோடியும், சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத் துக்கு ரூ. 258 கோடியும் உள்ளூர் சந்தையில் வசூலானது. தூம் 3 திரைப்படம் உலக அளவில் மொத்த வருவாய் திரட்டியதில் முதலி டத்தில் இருந்தாலும் அந்த சாத னையை பிகே வெகுவிரைவில் முறியடித்துவிடும்

பீகே படம் இந்துமதத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இந்துத்வா அமைப்பினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பீகே படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு போராட்டங்களை நடத்தினர். எனினும் உபியில் இந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ‘‘இந்தப் படம் மீது எழுந்த சர்ச் சைகள்தான் அது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகி பிரபலம் அடைந்ததற்கு முக்கிய காரண மாக உள்ளது’’ என்று திரைப்பட விமர்சகர் கோமள் நாதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x