

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத் தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக் கப்பட்ட திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித் துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருந்த கடிதத்தில், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்த தாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.
அதானி குழுமம், வேதாந்தா நிறுவனம், நிர்மா நிறுவனம் என சில நிறுவனங்களின் பெயர்களை யும் அக்கடிதத்தில் அவர் குறிப் பிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர் களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஜெயந்தி நடராஜன் தனது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ள சில விவ காரங்கள் தீவிரமான பிரச்சினை. எனவே, அவர் சொன்ன தனியார் நிறுவனங்கள் தொடர்பான கோப்பு களை நிச்சயமாக ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறி வேன்” என்றார்.
அருண் ஜேட்லி
இதுதொடர்பாக அருண் ஜேட்லி கூறும்போது, “சட்டப்பூர்வமாக ஒரு விஷயம் மதிப்பிடப்படாமல் காங்கிரஸ் தலைவர்களின் தான் தோன்றித்தனமான எண்ணங் களுக்கேற்ப மதிப்பிடப்பட்ட தையே, ஜெயந்தி நடராஜனின் கடிதம் வெளிப்படையாக காட்டு கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி அல்லது அனுமதி மறுக் கப்பட்டது என அனைத்தையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறு ஆய்வு செய்யும்” என்றார்.
ஜெய்ராம் ரமேஷ்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறும்போது, “ஜெயந்தி நடராஜ னுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறைக்கு நான் அமைச்சராக இருந் தேன். அந்த காலகட்டத்தில், எந்த வொரு சூழலிலும் அமைச்சரவை சார்ந்த விஷயங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை ராகுல் நேரடி யாகவோ மறைமுகமாவோ சொன்னதில்லை. ஜெயந்தி நடராஜ னின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை” என்றார்.