Published : 17 Jan 2015 10:42 AM
Last Updated : 17 Jan 2015 10:42 AM

காஷ்மீரில் பாதுகாப்பு படையுடன் மோதல்: ஜேகேஎல்எஃப் தலைவர் யாசின் மாலிக் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கு பாகிஸ்தானில் இருந்து வரும் மக்களும், பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து வரும் மக்களும் அகதிகளாகக் குடியேறி வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், நிரந்தர முகவரிச் சான்றிதழும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு ஒன்று மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும் பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்குவ தோடு, சட்டமன்றத்தின் இரு அவை களிலும் அவர்களுக்கு 8 இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து ஹுரியத் மாநாடு உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக் கட்சி போன்ற கட்சிகளும் இதற்கு எதிராகக் கருத்து கூறின.

இந்நிலையில், இந்தப் பரிந் துரைகளை எதிர்த்து வெள்ளிக் கிழமை மதிய தொழுகைக்குப் பின்னர், தலைநகரின் மையமான லால் சவுக் எனும் இடத்தில் ஜே.கே.எல்.எஃப் (ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி)அமைப் பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அங்கிருந்த பாது காப்புப் படையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் கலையாத நிலையில் அவர்களில் சிலரை கைது செய்தனர்.

எனினும், சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜே.கே.எல்.எஃப். அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப் பட்டார்.

பாக். தீவிரவாதி கைது

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவா தியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “அபு முவாவியா என்ற இந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். சோப் போர் பகுதியில் உள்ள சூரு என்ற இடத்தில், பஞ்சாயத்து தலைவர் ஒருவரின் வீட்டிலிருந்து வியாழக் கிழமை இரவு கைது செய்யப் பட்டார். அவர் வசமிருந்த ஆயுதங் கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

சோப்போர் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மோத லில் ஒரு தீவிரவாதியும், கெல்லர் என்ற இடத்தில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x