Published : 31 Jan 2015 11:29 AM
Last Updated : 31 Jan 2015 11:29 AM

திருப்பதியில் 2-ம் தேதி முதல் பக்தர்களுக்கு 4 கூடுதல் லட்டுகள்

திருப்பதியில் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) முதல், பக்தர்களுக்கு 4 கூடுதல் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 10 விலையில் 2 லட்டுகள் வழங்கப் படுகின்றன. திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை பக்தர்களுக்கு ரூ. 10 விலையில் 2 லட்டுகளும், 1 இலவச லட்டும் வழங்கப்படுகிறது. ரூ. 50 சுதர் சன டிக்கெட் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 25 விலையில் 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இது சமீப காலமாக 2 ஆக குறைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் நேற்று லட்டு கவுன்டர்களில் பக்தர்கள் பலர் தங்களுக்கு வழக்கம்போல் ரூ. 25 விலையில் 4 கூடுதல் லட்டுகள் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், வரும் திங்கள்கிழமை முதல், தலா 4 கூடுதல் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x