காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி? - ஆளுநருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி? - ஆளுநருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் பாஜகவும் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது.

மாநில ஆளுநர் என்.என்.வோராவை, இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று தனித் தனியே சந்தித்து ஆட்சி அமைப் பது தொடர்பாக தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவரித்தனர்.

இதற்கிடையே, எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவும் இவ்விரு கட்சிகளும் தயாராகிவிட்டன. ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுடன் பேச்சு நடத்தும் பிடிபி எம்எல்ஏ ஹசீப் திரபு, ஆளுநரை சந்தித்தார். முன்னதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் தலைமையிலான குழுவி னர் ஆளுநரை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு ஆட்சி அமைப்பது தொடர்பான ஏற்பாடு சில தினங்களில் முடி வாகும் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஆட்சி அமைப்பது பற்றி பாஜக - பிடிபி நடத்திவரும் ஆலோசனையின் தற்போதைய நிலவரம் பற்றி ஆளுநரிடம் மாதவ் தனது ஒரு மணி நேர சந்திப்பின் போது தெரிவித்ததாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளுநரை மாதவ் சந்தித்த போது அவருடன் மாநில பாஜக தலைவர் ஜுகல் கிஷோர், கட்சி எம்எல்ஏ நிர்மல் சிங் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து மாதவ் கூறும்போது, “பிடிபியுடன் பேசி வருகிறோம். அதில் முன்னேற்றம் உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே இரண்டு, மூன்று விவகாரங்கள் பற்றி விரிவாகப் பேசவேண்டும். இது கொள்கை சார்ந்தவை ஆகும். இது தீர்ந்தால் முடிவு ஏற்பட்டு விடும். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்கும் கட்டத்தை எட்டிவிட்டோம்” என்றார்.

இதனிடையே, 4 மாநிலங் களவை உறுப்பினர் பதவியை நிரப்ப, பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் தேர்தலில் கூட்டணி சேர பிடிபியும் பாஜகவும் முன்வந்துள்ளன. இந்த 4 இடங்களில் 2-க்கு பாஜக வேட் பாளர்களை அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 87 உறுப்பினர்களை கொண்டது. இதற்கான தேர்தலில் 28 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக பிடிபி வந்துள்ளது. பாஜக வுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும் காங்கிரஸுக்கு 12 இடங்களும் கிடைத்தன.

மக்கள் மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன் னணி (மதச்சார்பற்றது) ஆகியவை தலா 2 இடங்கள் வென்றன. சுயேச்சைகள் 3 இடங்கள் வென்ற னர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 இடம் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in