ரயிலில் ஆடிப்பாடி பிழைத்த திருநங்கை சத்தீஸ்கர் நகர மேயராக தேர்வு

ரயிலில் ஆடிப்பாடி பிழைத்த திருநங்கை சத்தீஸ்கர் நகர மேயராக தேர்வு
Updated on
2 min read

ரயிலில் நேற்று வரை ஆடிப்பாடி பிழைத்து வந்தவர் திருநங்கையான மது நரேஷ் கின்னர். இவர் தற் போது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் நகர மேயராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரி லிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது ராய்கர் நகரம். இங்கு நடைபெற்ற மேயர் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட 35 வயது திருநங்கை மது நரேஷ், 33,168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் மாநிலத்தின் முதல் திருநங்கை மேயர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளர் குருஜி என அழைக்கப்படும் மஹாவீர் சவுகானை 4,537 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித் துள்ளார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மது நரேஷ் கூறும்போது, ‘இந்தியா விலேயே முதன் முறையாக திருநங்கையான கமலா ஜான் கட்னி நகர மேயராக 1999-ல் தேர்ந் தெடுக்கப்பட்டார். மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்த சத்தீஸ் கரில் நான் முதலாவதாக மேயராகி உள்ளேன். ஒரு திருநங்கையால் தான் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க முடியும் என ராய்கர்வாசி கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை நிறை வேற்றும் வகையில் பணியாற்று வேன்” என்றார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மதுவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக, சுமார் 70,000 ரூபாயை சக திரு நங்கைகள் ஆடிப்பாடி பொது மக்களிடம் வசூல் செய்து வழங்கி உள்ளனர். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை மதுவும், ராய்கர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆடிப்பாடி பொதுமக்களிடம் பணம் பெற்று பிழைத்து வந்தவர்தான். இவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது.

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதே கட்சியைச் சேர்ந்தவர் கடந்த முறை மேயராக இருந்தார். இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், அதிருப்தி யாளர்கள் சுயேச்சை வேட்பாளரான மதுவுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்திருப்பதாகக் கூறப்படு கிறது.

இதுபோல திருநங்கைகளை பொது வாழ்வில் களமிறக்கி முக்கியப் பதவிகளில் தேர்ந்தெடுப் பதற்கு ம.பி. மாநிலம் பெயர் போனது. இதன் தலைநகரான போபாலின் முதல் திருநங்கை எம்.எல்.ஏ.வாக 2000-ம் ஆண்டில் ஷப்னம் மவுசி என்பவர் சுயேச்சை யாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைப் பார்த்து, நாட்டின் இரண்டாவது திருநங்கை மேயராக உபியின் கோரக்பூரில் போட்டியிட்டு ஆஷா தேவி என்பவர் 2000-ம் ஆண்டில் வெற்றி பெற்றார்.

திருநங்கை என்றால் இந்தியில் கின்னர் என்று அர்த்தம். எனவே, வட இந்தியாவில் திருநங்கைகளை அவர்களது பெயருடன் கின்னரை யும் சேர்த்து அழைக்கிறார்கள். உதாரணமாக மது நரேஷ் கின்னர். இதுபோல் உருது மொழியில் ‘ஹிஜிடா’ என்று அர்த்தம். எனவே, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள திருநங்கைகளின் பெயருடன் ஹிஜிடாவையும் சேர்த்து அழைக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in