Published : 03 Jan 2015 11:32 AM
Last Updated : 03 Jan 2015 11:32 AM

விடுதலைப் புலிகள் பெயரில் மோசடி: பெங்களூருவில் சிவப்பு பாதரசத்தை ரூ.150 கோடிக்கு விற்க முயற்சி - கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

விடுதலைப் புலிகள் அணுகுண்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த சிவப்பு பாதரசம் என பொய் சொல்லி அலுமினிய உருளையை ரூ.150 கோடிக்கு விற்க முயன்ற 3 பேர் பெங்களூருவில் கைது செய் யப்பட்ட‌னர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீ ஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெங்களூரு குற்றப்பிரிவு துணை ஆணையர் அபிஷேக் கோயல் கூறியதாவது:

பெங்களூருவில் ஒரு கும்பல் அணுகுண்டு தயாரிக்கப் பயன் படும் சிவப்பு பாதரசத்தை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயல்வதாக குற்றப்பிரிவு போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் மாறு வேடத்தில் மோசடி கும்பலிடம் வாடிக்கையாளர்களைப் போல பேசினர்.

அப்போது ஓசூரைச் சேர்ந்த மணிகண்டன், முகமது ஹ‌னீப் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த நாகராஜா ஆகியோர், “விடு தலை புலிகள் அணுகுண்டு த‌யாரிப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து, ‘சிவப்பு பாதரசம்’ என்ற மூலப்பொருளை பல நூறு கோடிக்கு வாங்கினர்.அந்த அமைப் பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதால் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் அதை இந்தி யாவுக்கு கொண்டு வந்துள்ளார். தற்போது அந்த சிவப்பு பாதரசத் தின் மதிப்பு ரூ.150 கோடி என்றனர்.

மேலும் அதைக் காட்ட வேண்டு மென்றால், ரூ.5 லட்சம் முன்பண மாக தர வேண்டும் என கூறியுள் ளனர். இதையடுத்து போலீ ஸார் ரூ.5 லட்சத்தை கொடுத்தனர். முன்பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் ஒரு சிலிண்டருக்குள் உருளையாக செய்யப்பட்ட அலு மினியத்தை, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் சிவப்பு பாதரசம் என காட்டியுள்ளனர். இதற்காக அமெரிக்க ஆய்வகம் அளித்தது போன்ற போலி சான்றித ழையும் ஆதாரமாகக் காட்டி யுள்ளனர்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் மணிகண்டன், முகமது ஹனீப், நாகராஜா ஆகிய மூவரையும் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜெய் சிங்கை போலீஸார் தேடி வருகின்றனர். கைதான மூவரிடமும் இந்த நூதன மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

விடுதலைப் புலிகள் பெயரில் சிவப்பு பாதரசம் என பொய் சொல்லி ரூ.150 கோடி மோசடி செய்ய முயன்ற‌ வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகி இருப்பது, கர்நாடக தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x