Last Updated : 02 Apr, 2014 11:35 AM

 

Published : 02 Apr 2014 11:35 AM
Last Updated : 02 Apr 2014 11:35 AM

சூழல் அமைந்தால் மத்திய அரசில் பங்கேற்போம்!- மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேட்டி

காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெற்று மாற்று அணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழ் நிலை ஏற்பட்டால், மத்திய அரசில் பங்கேற்பது பற்றி அப்போது முடிவு செய்வோம். என்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உறுதி படக் கூறியுள்ளார்.

மத்திய அரசியலில் மூன்றாவது அணியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா?

இதுவரை மன்மோகன் சிங் பக்கம் இருந்த இந்த ஊடகங்கள், இப்போது மோடி பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பி உள்ளன. மன்மோகனை விட மோடிதான் சிறப்பாக செயல்படக் கூடியவர் என அவை கருதுகின்றன. அதைத் தான் கார்ப்பரேட் நிறுவனங்களும் விரும்புகின்றன.

உறுதியான ஆட்சி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் என்ற பெயரில், அதிருப்தியாளர்களை ஒடுக்கி விட முடியும் என்று கருதுகின்றனர். இதனுடன் இந்துத்துவக் கொள்கையும் சேர்ந்தால் அபாயகரமான சூழ்நிலை ஏற்படும். அத்தகைய சூழ்நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் எங்களின் எதிர்ப்பைத் தெரி வித்து வரு கிறோம். கூடுதல் அதிகாரத் துடன் கூடிய கூட்டாட்சி முறையையும், அதிகாரப் பரவ லாக்கத்தையும்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்தியில் சர்வாதிகாரத் தன்மை யுடன் கூடிய ஆட்சி அமை வதை நாங்கள் விரும்பவில்லை. அதிகாரம் அனைத்தும் ஒரு வரிடம் மட்டுமே குவிந்திருக் கும் வகையிலான அதிபர் ஆட்சி முறையை பாஜக விரும்பு கிறது. எங்களுக்கு அதில் உடன் பாடில்லை.

மாற்று அணியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகவும் அவசரப் பட்டுவிட்டோம் என இப்போது நினைக்கிறீர்களா?

எங்களுடன் ஒத்த கருத்துடைய (காங்கிரஸ், பாஜகவுக்கு எதி ரான) கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுவதற்கான விருப்பத்தைத்தான் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியிட்டோம். தேர்தலுக்குப் பிறகு மாற்று அணி குறித்த இறுதி வடிவம் கிடைக்கும்.

உங்களுடன் கைகோர்த்திருந்த கட்சிகள் சில பின்வாங்கிவிட்டன. இது, பின்னடைவுதானே?

பிராந்திய கட்சிகள் அனைத்தும், இந்த தேர்தலில் தங்களின் செல் வாக்கை நிரூபித்துக் காட்ட அதிக பட்ச உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் தங்களின் மாநிலங்களில் ஒன்று காங்கிரஸை எதிர்த்தோ அல்லது பாஜகவை எதிர்த்தோ போராட வேண்டிய நிலையில் உள்ளன. இந்த பொதுத்தன்மையை பயன் படுத்தி தேர்தலுக்குப் பிறகு இணைந்து செயல்பட உள்ளோம்.

மூன்றாவது அணி என்ற வார்த்தையே பயனற்றதாகிவிட்டதா?

மூன்றாவது அணி என்றாலே ஒரு பொதுவான செயல்திட்டத்தின் கீழ் செயல்படுவதாக இருக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு இடையே அப்படியொன்று இல்லாத நிலையில், நாங்கள் எப்படி மூன்றாவது அணி என்று அழைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்குப் பிறகு, குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தின் அடிப் படையில் மூன்றாவது அணி ஏற்படுவது சாத்தியமே.

இடதுசாரிகளுக்கு கிடைக்காத முக்கியத்துவம் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைப்பது ஏன்?

நாங்கள் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், கடைசி வரை போராடுவோம். ஆம் ஆத்மி கட்சி, பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அந்த பிரச்சினை ஏற்பட அடிப்படை காரணமான கொள்கைகள் குறித்து பேசுவதில்லை. நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதி யினர் தனியார்மயத்தை ஆதரிக் கின்றனர். அவர்களுக்கு ஊழல் தொடர்பாக அறநெறிசார்ந்த கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அணுகுமுறை பிடித் திருக்கிறது.

காங்., பாஜக அல்லாத மத்திய அரசில் பங்கேற்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், மார்க்சிஸ்ட் கட்சி அதை ஏற்றுக் கொள்ளுமா?

சூழ்நிலையைப் பொறுத்துத் தான் அது பற்றி முடிவு செய் வோம். அப்படியொரு நிலை ஏற்பட் டால் என்ன செய்வோம் என்று ஊகத்தின் அடிப்படையில் இப்போதே கூறுவது பயனற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு தேர்தலில் கிடைக்கப்போகும் வெற்றியை வைத்துத்தான், அப்படியொரு சூழ்நிலை ஏற்படுமா, இல்லையா என்பது தெரியும்.

எந்த மாதிரியான மாற்று அணியை உருவாக்கப் போகி றோம், அந்த அணி எந்த அள விற்கு ஒத்திசைவுடன் அமையும், குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம் அமைக்க முடியமா என் பதை எல்லாம் ஆராய வேண்டும்.

அதன் அடிப்படையில் அந்த அரசில் சேர்வது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்யும். இது தொடர்பாக கடுமையான விதிமுறை எதையும் நாங்கள் வைத்திருக்கவில்லை. சூழ்நிலையையும், தேவையையும் பொறுத்துத்தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x