

கர சேவகர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நஜீரை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் பாபய்யா கவுட், சுந்தர்ராஜா கவுட் ஆகியோர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ஃபயாசுதீன் கூட்டாளி யான நஜீர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நஜீருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த அவர் துபாய்க்கு சென்று தலைமறைவானார். இந்நிலையில் நேற்று காலை துபாயிலிருந்து விமானம் மூலம் ஹைதரா பாத் வந்த நஜீரை போலீஸார் கைது செய்தனர்.