வாக்காளர் பட்டியலில் 2.73 கோடி ஜென்-ஸி இளைஞர்கள் சேர்ப்பு

வாக்காளர் பட்டியலில் 2.73 கோடி ஜென்-ஸி இளைஞர்கள் சேர்ப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: 2025-ம் ஆண்​டில் எஸ்​ஐஆர் பணி​யைத் தொடங்கியதிலிருந்​து, 18 முதல் 28 வயதுக்​குட்​பட்ட 2.73 கோடி ஜென் ஸி இளைஞர்​கள் வாக்காளர் பட்​டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர்.

இது குறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: 1950-ம் ஆண்டு மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தின் பிரிவு 14-ல் 2021-ம் ஆண்டு செய்​யப்​பட்ட திருத்​தம் மற்​றும் பிரிவு 19-ன் படி, ஜனவரி1, ஏப்​ரல் 1, ஜூலை 1 அல்லது அக்​டோபர் 1 ஆகிய தேதி​களில் 18 வயதை பூர்த்தி செய்யும் அல்​லது ஏற்​கெனவே 18 வயதை அடைந்த எந்த நபரும், எந்​தவொரு திருத்​தப் பணிக்​காக​வும் காத்​திருக்​காமல், வழக்கமான வாக்​காளர் பட்​டியல் புதுப்​பிப்பு நடை​முறை​யின் கீழ் வாக்​காள​ராகப் பதிவு செய்ய விண்​ணப்​பிக்​கலாம்.

எஸ்​ஐஆர் கால​கட்​டத்​தி​லும் 18-28 வயதுடைய​வர்​களில் 2.73 கோடி பேர் வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டிருப்​பது, இளம் வாக்காளர்​களின் பதிவு தொடர்ந்து நடை​பெற்​றதற்​கான சான்​று. இவ்வாறு அவர்​கள்​ கூறினர்.

வாக்காளர் பட்டியலில் 2.73 கோடி ஜென்-ஸி இளைஞர்கள் சேர்ப்பு
தூக்கமில்லாத இரவுகளை பாகிஸ்தானுக்கு கொடுத்த பிரம்மோஸ் ஏவுகணைகள்: அமித் ஷா பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in