

நிலம் கையகப்படுத்துவதற் கான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்ஜேஎம்) எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மாற்றிக் கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அது கோரிக்கை வைத்திருக்கிறது.
இதுதொடர்பாக எஸ்ஜேஎம் தேசிய இணை அமைப்பாளர் அஸ்வினிமகாஜன் கூறியதாவது:
இந்த அவசர சட்டம் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும். நல்ல சிந்தனையுடன் ஆழ்ந்து பரிசீலித்து உரிய திருத்த நடவடிக்கையை அரசு மேற் கொள்வது நன்மை பயக்கும். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட ஆவன செய்யவேண்டும்
நிலம் கையகப்படுத்தும்போது சர்வதேச அளவில் சமூக பாதிப்பு மதிப்பீடு செய்வது மிக முக்கியமானது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசித்தே இந்த நிலம் கையகப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் பாஜகவும் ஆதரவு கொடுத்தது என்றார். எதிர்ப்பை மீறி அவசரசட்டம் கொண்டு வரப்பட்டு விட்டதே எஸ்ஜேஎம் என்ன செய்யப்போகிறது என்று கேட்ட தற்கு, இது பற்றி ஆலோசனை நடத்திவருகிறோம். இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும்போது மத்திய அரசு உரிய திருத்தம் கொண்டு வரும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு சட்ட விதி
நிலம் கையகப்படுத்தும்போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பர்றி ஆராய்வது அவசியம். எல்லா வழியிலும் இதற்கு ஈடுசெய்யப் படவேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்றார்.