இந்திய எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு

இந்திய எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் பகுதியில் உள்ள கெர்னி கிராமம் அருகே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

பூஞ்ச் மாவட்டம் எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் காலை 5.15 மணியில் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு படை கருதுகின்றது.

துப்பாக்கிச் சூடு நீடித்து வரும் நிலையில், இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையே கொடி சந்திப்பினை மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று மீண்டும் இந்திய நிலைகள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in