தாய் மதத்துக்கு திரும்புவதைத் தடுக்கக் கூடாது: வி.எச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கருத்து

தாய் மதத்துக்கு திரும்புவதைத் தடுக்கக் கூடாது: வி.எச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கருத்து
Updated on
1 min read

ஹைதராபாத்தில் நடைபெற்ற விஸ்வஇந்து பரிஷத் (வி.எச்.பி.) நிர்வாகிகள் கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறியதாவது:

மதமாற்றத்தை நாங்கள் எதிர்க்கிறோம். வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே, அந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்பவர்களை, மதமாற்றம் செய்யப்பட்டனர் என்ற வரையறைக்குள் கொண்டு வரக் கூடாது. தாய் மதத்துக்கு திரும்பும் நடவடிக்கை அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது அல்ல. தாய் மதத்துக்கு திரும்புவதால் வளர்ச்சி பாதிக்கப்படாது.தேசிய நீரோட்டத்தில் இணைய தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சி வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

தேசிய பற்றுமிக்கவர்களின் மூலம் நாட்டில் சீரான வளர்ச்சி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மதமாற்றத்தை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழங்காலத்திலிருந்தே தாய்மதம் திரும்புதல் நடைபெற்று வருகி றது. இதை பல்வேறு பெருந்தலைவர்களும் ஆதரித்துள்ளனர். மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 ஆணையங்களின் பரிந்துரைகளில் மத மாற்றம் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு எதிராக மகாத்மா காந்தியும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொகாடியா கூறினார். தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடி சொன்னால், கேட்பீர்களா என்றதற்கு பதிலளிக்க தொகாடியா மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in