Published : 31 Dec 2014 01:05 PM
Last Updated : 31 Dec 2014 01:05 PM
தேவைப்பட்டால் விரித்துக்கொள்ளவும் தேவையில்லாத நேரத்தில் மடித்துவைத்துக்கொள்ளவும் கூடிய மடக்கு நாற்காலியைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதைப் போன்ற ஒரு விளையாட்டு மடக்கு நாற்காலியை வீட்டில் செய்து பார்ப்போமா?
தேவையான பொருள்கள்:
நீளமான ஒயர் ஒரு துண்டு, தடிமனான காட்போர்டு, வண்ணக் காகிதம், கறுப்பு நிற கிராப்ட் காகிதம், கத்தரிக்கோல், பசை.
செய்முறை:
1. படத்தில் காட்டியுள்ளது போல் இரண்டு வடிவங்களை காட்போர்டிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு வடிவங்களும் நாற்காலியின் இருக்கை மற்றும் சாய்வுப் பகுதிகளாக இருக்கும். அதன் மீது வண்ணக் காகிதத்தை ஒட்டுங்கள். பின்னர் கறுப்பு நிற கிராப்ட் காகிதத்தில் வட்ட வடிவத்தை வெட்டி எடுத்து அதை நாற்காலியின் இருக்கைக்கான சதுர வடிவ அட்டையில் ஒட்டுங்கள்.
2. படத்தில் காட்டியுள்ளது போன்ற சதுர வடிவங்களில் ஒயரை மடித்துக்கொள்ளுங்கள். இவை நாற்காலியில் இருக்கை, சாய்வுப் பகுதி ஆகியவற்றுக்கான சட்டங்களாக இருக்கும்.
3. இப்போது நாற்காலியின் பகுதிகளைத் தாங்கும் சட்டங்களைச் சிறு ஒயர் துண்டுகளின் உதவியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
4. நாற்காலியின் இருக்கை, சாய்வுப் பகுதி ஆகியவற்றை சட்டங்களின் மீது பொருத்துங்கள்.
இப்போது உங்களுக்கு அழகான நாற்காலி கிடைத்துவிட்டதா? இந்த நாற்காலியில் உங்கள் விளையாட்டு குட்டிப் பொம்மைகளை உட்காரவைத்து விளையாடுகிறீர்களா?