காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இருதரப்பு மோதலில் இரண்டு நாட்களில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குப்வாரா உட்பட 5 மாவட்டங்களில் உள்ள 18 பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றபோது ஊடுருவல் முயற்சி நடந்தது. அப்போது நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதேபோல், நவ்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

ஜம்மு பிராந்தியத்தின் ஆர்னியா பகுதியில் கடந்த நவம்பர் 27-ம் தேதி தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்களும் 5 அப்பாவி மக்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in