Last Updated : 02 Dec, 2014 08:49 AM

 

Published : 02 Dec 2014 08:49 AM
Last Updated : 02 Dec 2014 08:49 AM

சகாரா குழுமத்துடன் அமித் ஷாவுக்கு தொடர்பா?- திரிணமூல் - பாஜக உறுப்பினர்கள் மோதல்

முறைகேடு புகாரில் சிக்கியுள்ள சகாரா குழுமத்துடன் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு உள்ள தொடர்பு குறித்து பதில் அளிக்கு மாறு வலியுறுத்தியதால், நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது.

நாடாளுமன்ற இரு அவை களிலும் அமித் ஷாவை குறி வைத்து, ஒரு டயரியின் நகலைக் காட்டி திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையின் மையப் பகுதிக்குச் சென்ற திரிணமூல் காங் கிரஸ் உறுப்பினர்கள், சகாரா குழும தலைவர் சுப்ரதா ராயிடமிருந்து சிபிஐ கைப்பற்றிய டயரியில் பாஜக தலைவரின் பெயர் (அமித் ஷா) இடம்பெற்றிருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இதுதொடர்பாக விவாதிக் கக் கோரி திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் இதை ஏற்க மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார். பின்னர் திரிணமூல் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரைப் பற்றி விவாதிக்க விதிமுறையில் இட மில்லை. மேலும் அவை விதிப்படி எந்த ஒரு பொருளையும் (டயரி) வெளியிலிருந்து அவைக்குள் எடுத்து வந்து காட்டக் கூடாது” என்றார்.

பின்னர் பாஜக உறுப்பினர் கிரித் சோமய்யா கூறும்போது, “3.5 லட்சம் சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றிய சாரதா சீட்டு நிறுவன மோசடியில் 10-க்கும் மேற்பட்ட திரிணமூல் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், இது தொடர்பான சிபிஐ விசாரணைக்கு மேற்குவங்க அரசு ஒத்துழைப்பு தர மறுக்கிறது” என குற்றம்சாட்டினார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்…

மாநிலங்களவையிலும் பூஜ்ஜிய நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்தப் பிரச்சினையை விவாதிக்க அனுமதி கோரி திரிண மூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரக் ஓ பிரயன் நோட்டீஸ் அளித் தார். இதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதையடுத்து திரிணமூல் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். முன்ன தாக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கு மாறு அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து சுதீப் பந்தோபாத் யாயா நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறும்போது, “அந்த டயரியில் உள்ள பெயரை ரகசிய மாக வைத்திருப்பது ஏன் என் பதை அறிய விரும்புகிறோம். இந்த விவகாரத்தை சும்மா விட முடி யாது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறும்போது, “திரிணமூல் காங்கி ரஸின் குற்றச்சாட்டுகள் தவறா னவை, ஊகத்தின் அடிப்படை யிலானவை. அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்” என்றார்.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், சாரதா சீட்டு நிறுவன ஊழலில் தொடர்புடையர்களைக் காப்பாற்ற திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு முயல்வதாக அமித் ஷா குற்றம்சாட்டி பேசினார்.

இந்நிலையில் திரிணமூல் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத் தில் அமித் ஷா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x